Eulogy to Hajee K A KHALEEL AHAMED SAHIB, Former Treasurer, JMC

மர்ஹூம் ஹாஜி K A கலீல் அஹமது சாஹிபு
(முன்னாள் பொருளாளர், ஜமால் முஹம்மது கல்லூரி)
——————————————-

தங்கமானவர் முன்னால்
தங்கப்பதக்கங்கள் பின்னால்!
இம்மையில் சாதித்த உம்மை
மறுமை போற்றுவது உண்மை!

குழந்தையாய் வாழ்ந்த பெரியவர் – நற்
குணங்கள் சூழ்ந்த அரியவர்
பொருளைக் காத்த பொருளாளர்-இறை அருளைப் பெற்ற திருவாளர்

தாயாய் இருந்த தந்தை – இந்த
தரணியில் சிறந்த விந்தை!
கண்களில் ஓடுது கங்கை – உமை
காணத் துடிக்குது சிங்கை!

ஜமாலில் நீர்ஒரு சரித்திரம் – என்றும்
ஜமாலியன் போற்றும் சித்திரம்!
எண்ணத்தில் வாழும் எளியவரை
ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அழைக்கிறது!

கண்ணீருடன்,
மு. அ. காதர்
தலைவர்
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)